pakistan
செய்திகள்உலகம்

கிரே பட்டியலில் தொடர்ந்து நீடிக்கிறது பாகிஸ்தான்

Share

பாகிஸ்தான் பயங்கரவாத நிதி தடுப்பு நடவடிக்கையில் தோல்வியடைந்துள்ள நிலையில், கிரே பட்டியலில் தொடர்ந்தும் இடம்பெற்றுள்ளது.

எப்.ஏ.டி.எப் எனப்படும் நிதி நடவடிக்கை பணிக்குழு, பயங்கரவாத குழுக்களுக்கு நிதியுதவி அளிப்பதைத் தடுத்து நடவடிக்கை எடுப்பதற்கான கண்காணிப்பு அமைப்பாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில், குறித்து குழு இத்தகவலை வெளியிட்டுள்ளது

பிரான்ஸில் இயங்கி வரும் இந்த அமைப்பு பயங்கரவாத நடவடிக்கைகளை ஆதரிக்கும் நாடுகளை இரு வகைகளாகப் பிரிக்கின்றது.

கறுப்புப் பட்டியல் மற்றும் கிரே பட்டியல் என இரு வகைகளாகப் பிரிக்கும் இந்தப் பட்டியலில், பயங்கரவாதத்தை ஒழிக்காத நாடுகள் மற்றும் அதற்கு ஆதரவு வழங்கும் நாடுகள் இடம்பிடித்துள்ளன.

இந்நிலையில், லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைப்பதை பாகிஸ்தான் தடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், பாகிஸ்தானை கிரே பட்டியலில், எப்.ஏ.டி.எப் அமைப்பு நீடித்து அறிவிப்பினை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 63
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடு முழுவதும் 28,000-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை: 763 பேர் கைது எனப் பொலிஸார் அறிவிப்பு!

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் நேற்று (09) முன்னெடுக்கப்பட்ட...

world 62
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்டாவில் 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான தரமற்ற அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல்!

கொழும்பு, பெட்டா பகுதியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு, எவ்வித லேபிள்களும் இன்றி வைக்கப்பட்டிருந்த சுமார் 10...

world 61
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சர்ச்சைக்குரிய மருத்துவ நியமன நடைமுறை: மே 8 ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவு!

சர்ச்சைக்குரிய உள்ளகப் பயிற்சிக்குப் பிந்தைய மருத்துவ நியமன நடைமுறைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு...

world 60
செய்திகள்இலங்கை

புத்தாண்டு தினங்களில் நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடல்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில்...