தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் முரண்பாடுகள் எழுந்துள்ளன எனவும் இதனால் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளது தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் பேச்சு நடத்தினர் எனவும் செய்திகள் வெளியாகின.
இதனால் சில விடயங்களில் தெளிவற்ற நிலை ஏற்பட்டுள்ளதாால் இதனை தெளிவுபடுத்தும் வகையில் இரா.சம்பந்தன் இன்று மாலை விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை வலுவிழக்கச் செய்வதற்கு சில சக்திகள் முயற்சிக்கின்றன. ஒற்றுமையை உறுதி செய்யும் முகமாக சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன.
ஒற்றுமையைப் பேணுவது எமது அடிப்படையானதாகும். மக்கள் மத்தியில் ஒரு தெளிவு இருக்க வேண்டும். மாறாக அவர்களை குழப்பமடையச் செய்யக்கூடாது.
முழுமையான அனைத்து விடயங்களும் உள்ளடங்கிய ஓர் அரசமைப்பை இந்த நாடு உருவாக்க முனைவதாக கூறப்படுகிறது.
தேசியப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வை அரசமைப்பின் ஊடாக பெற்றுக்கொள்வதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான நோக்கமாகும்.
ஒன்றுபட்ட பிளவுபடாத நாட்டுக்குள் சமத்துவம் நீதி மற்றும் சுயமரியாதை என்பவற்றின் அடிப்படையில் தீர்வை எட்டு குறிக்கோளில் உறுதியாக பயணிப்பதற்கு தெளிவின்மை மற்றும் குழப்பங்களையும் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்– என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a comment