118951040 9551027e 04fe 4046 b1c1 6f34ef837a31
செய்திகள்இந்தியா

இலங்கை கடற்படையின் கைதுக்கு வலுக்கும் எதிர்ப்பு

Share

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களையும் விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக மீனவர்கள் தொடர்பில் எழுதியுள்ள கடிதத்தில்,  கடந்த 11ஆம் திகதி நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடி படகுகளில் மீன் பிடிக்க சென்ற 23 மீனவர்கள், 13 ஆம் திகதி பாரம்பரிய மீன்பிடித்தளமாக உள்ள பருத்தித்துறை அருகே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைதான மீனவர்கள் காரைநகர் கடற்படை தளத்துக்கு அழைத்து செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது.

இந்திய, இலங்கை மீனவர்களுக்கிடையேயான இந்த நீண்டகால பிரச்சினையில் உடனடியாக இந்திய பிரதமர் தலையிட்டு,  இப்பிரச்சினையை நிரந்தரமாக தீர்த்திட, உறுதியான வழிமுறைகளை காண வேண்டுமென்றும் எனவும், மோடிக்கு எழுதிய கடிடித்தில்
குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 23 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மத்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு, மத்திய மீன்வள துறை துணையமைச்சர் எல். முருகன் கடிமெழுதியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
01 10
செய்திகள்உலகம்

ஈரான் போர்: அமெரிக்க இராணுவத்தினர் காயமடைந்தது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியீடு

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்தி வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’...

30 3
செய்திகள்உலகம்

ஈரான் மீது அதிரடித் தாக்குதல்: பென்டகனின் உச்சகட்ட எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை முன்னெப்போதும்...

29 3
செய்திகள்உலகம்

ஈராக் வான்வெளியைப் போர்க்களமாக மாற்ற வேண்டாம்: அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் பிரதமர் அல்-சூடானி வலியுறுத்தல்!

மேற்காசிய பிராந்தியத்தில் போர்ச் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி,...

28 3
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் 5ஜி அலைக்கற்றை ஏலம்: 50.7 கோடி டொலர் வருவாய் ஈட்டப்பட்டது!

பாகிஸ்தானில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று (மார்ச் 10, 2026) இஸ்லாமாபாத்தில் வெற்றிகரமாக...