களுத்துறையில் மிதப்பு பாலம் கவிழ்ந்ததில் ஒருவர் மாயம்!

1638603373 death L

நேற்றைய தினம் களுத்துறை தெற்கு பிரதேசதில் களுகங்கையில் மிதப்பு பாலம் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகி உள்ளது.

இதில் ஐவர் பயணம் செய்துள்ளதோடு, 3 மோட்டார் சைக்கிள்களும், மிதிவண்டி ஒன்றும் மிதப்பு பாலத்தில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கிய 4 பேரை மீட்டுள்ளதோடு ஒருவரை தேடும் பணியை கடற்படையினரும் இராணுவத்தினரும் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பயணிகள் பாதுகாப்பு அங்கிகள் அணிந்திருக்கவில்லை என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இருந்தபோதிலும் பிரதேசவாசி ஒருவர் மீட்கப்பட்ட நால்வரும் பாதுகாப்பு அங்கி அணிந்திருந்ததாக தெரிவித்துள்ளார்.

 

#SriLankaNews

Exit mobile version