சீனாவை ஒமிக்ரோன் தாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வடக்கு சீனாவில் உள்ள தியான்ஜின் நகரத்தில் வெளிநாடு சென்று திரும்பிய ஒருவருக்கு ஒமிக்ரோன் தொற்று உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவா் எந்த நாட்டுக்குச் சென்று வந்தாா் என்கிற தகவல் எதுக்கும் சீனா வெளியிடவில்லை.
அறிகுறிகள் இல்லாமல் இருந்த அவருக்கு முதலில் கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் அவரை ஒமிக்ரோன் பரிசோதனையில் உட்படுத்திய பின் அவருக்கு ஒமிக்ரோன் தொற்று உள்ளதெனகண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவா் தற்பொழுது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரோன் தற்போது பல நாடுகளையும் தாக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#world
Leave a comment