புகைப்பிடிப்பவர்களே கொரோனாவால் அதிக இறப்பினை சந்திக்க நேரிடும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட், பிரிஸ்டல் பல்கலைக்கழகம் மற்றும் நாட்டிங்காம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து இவ் ஆய்வை முன்னெடுத்திருந்தனர்.
இவ் ஆய்வுக் குழுக்களானது இணைந்து முதன்மை பராமரிப்பு பதிவுகள், கொரோனா சோதனை முடிவுகள், மருத்துவமனை சேர்க்கை தரவு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் ஆகியவற்றை ஆய்வுக்குட்படுத்தியிருந்தது.
குறித்த ஆய்வில் புகைப் பிடிக்காதவர்களுடன் ஒப்பிடுகையில், புகைபிடிப்பவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு 80 சதவிகிதம் அதிகமாக வாய்ப்பு இருப்பதாகவும், கணிசமாக கொரோனாவால் இறப்பவர்களில் பலர் புகைப் பழக்கத்திற்கு ஆளானவர்கள் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இவ் ஆய்வு தொடர்பாக ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிளிஃப்ட் கருத்து தெரிவிக்கையில்,
புகைபிடிப்பதனால் நீங்கள் கொரோனா தொற்றால் கடுமையான பாதிப்பை சந்திக்க நேரிடும். மேலும் புகைபிடித்தல் இதய நோய், புற்றுநோய்கள் மற்றும் நுரையீரல் நோய்களை வரவழைக்கக்கூடியது எனவும் தெரிவித்துள்ளார்.
Leave a comment