“அடுத்த தேர்தலில் தனித்து போட்டியிடுவது தொடர்பில் கட்சி இன்னும் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை.”- என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
அடுத்த தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனித்து களமிறங்க வேண்டும் என அநுராதபுரம் மாவட்ட கிளைக்கூட்டத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
இந்நிலையில் இது தொடர்பில் வினவியபோதே கட்சியின் பொதுச்செயலாளர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மாவட்ட மட்டங்களில் முடிவுகள் எடுக்கப்பட்டாலும், கட்சியின் மத்திய மற்றும் நிறைவேற்றுக்குழுவே இறுதி முடிவை எடுக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
#SriLankaNews
Leave a comment