இந்தியாவில் பாலியல் குற்றங்களை விசாரிக்க இனி தனியான நீதிமன்று அமைக்கப்பட வேண்டுமென, இந்திய மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு, குற்றவியல் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிய இந்திய மத்திய அரசாங்கம், பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பான வழக்குகளை விசாரணை செய்வதில் காலதாமதம் நிலவுவதாகவும் குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில் அவ்வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்தும் நோக்கில், ஒவ்வொரு மாநிலங்களிலும் இது குறித்த விசாரணைகளுக்கு விரைவு நீதிமன்றத்தை நிர்மாணிக்க வேண்டும் என, மாநில அரசாங்கங்களுக்கு, மத்திய அரசாங்கம் அறிவித்தல் வழங்கியுள்ளது.
இந்நீதிமன்றங்களை மத்திய அரசின் நிதியுதவியுடன் நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#india
Leave a comment