உணவுத் தட்டுப்பாடு ஏற்படாது! – மஹிந்தானந்த உறுதி

mahindananda aluthgamage

நாட்டில் உணவுக்கு எவ்வித தட்டுப்பாடு ஏற்படாது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” இறக்குமதி செய்யப்பட்டுள்ள உரத்துக்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்கும். விவசாயிகளுக்கு விளைச்சலில் ஏதேனும் குறைவு ஏற்பட்டால் அதற்கான இழப்பீட்டையும் விவசாயிகளுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் தயாராகவே இருக்கின்றது.

விவசாயிகளின் சிறுநீரகங்களையும் பாதுகாப்பதற்கே நாம் முயற்சிக்கின்றோம். எனவே, இயற்கை விவசாயத்தை நோக்கி பயணிக்கும் எமது முயற்சிக்கு எதிரணியும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.” – எனவும் விவசாயத்துறை அமைச்சர் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Exit mobile version