செய்திகள்உலகம்

தெற்கு ஆபிரிக்க நாடுகளில் வீரியமான புது வைரஸ் திரிபு

Share

மிக மோசமான பிறழ்வுகளை எடுக்கின்ற வைரஸ் திரிபு ஒன்றைத் தாங்கள் அடையாளம் கண்டுள்ளனர் என்ற தகவலை தென் ஆபிரிக்கா உட்பட தெற்கு ஆபிரிக்க நாடுகள் சிலவற்றின் அதிகாரிகள் அறிவித்திருக்கின்றனர்.

தென் ஆபிரிக்கா, லெசோதோ, போட்சுவானா, சிம்பாப்வே, மொசாம்பிக் நமீபியா,ஈஸ்வதினி (South Africa, Lesotho, Botswana, Zimbabwe, Mozambique, Namibia Eswatini) ஆகிய ஆறு நாடுகளிலேயே இந்தப் புதிய-ஆபத்தான – வைரஸ் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இந்த நாடுகளுடனான போக்குவரத்துகளை இடைநிறுத்த அவசர முடிவுகளை ஐரோப்பிய நாடுகள் சில எடுத்துள்ளன.

இதுவரை கொரோனா வைரஸில் இருந்து மாறுபாடடைந்து தோன்றிய கிரிமிகளில் மிக ஆபத்தான திரிபு என்று அதனை அறிவியலாளர்கள் மதிப்பிடுகின்றனர்.தீவிரமான பிறழ்வுகளை (heavily mutated) எடுக்கக் கூடியது என்று அறியப்படுகின்ற இந்த ஆபிரிக்கத் திரிபு தொடர்பில் நிபுணர்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டில் முதலில் தோன்றிய டெல்ரா திரிபு வைரஸின் பல பிறழ்வு வடிவங்களே இன்று உலகெங்கும் தடுப்பூசிகளை எதிர்த்து நின்று புதிது புதிதாகத்தொற்றலைகளை உருவாக்கி வருகின்றன.தெற்கு ஆபிரிக்காவில் காணப்படுகின்ற – பெயரிடப்படாத – இந்தத் திரிபும் வருங்காலங்களில்
கட்டுக்கடங்காமல் பரவுகின்ற ஆபத்து இருக்கிறது என்று அறிவியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

“வைரஸ் பிறழ்வுகளின் அசாதாரணமான ஒரு தோற்றம் இது” என்று தென் ஆபிரிக்காவின் தொற்று நோய்த் தடுப்பு மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான நிலையத்தின் (Centre for Epidemic Response and Innovation in South Africa) பணிப்பாளர் பேராசிரியர் துலியோ டி ஒலிவேரா (Prof Tulio de Oliveira) குறிப்பிட்டிருக்கிறார்.

ஆய்வுகூடங்களில் நடத்தப்பட்ட சோதனைகள் இது மிக மோசமான வைரஸ் உருமாற்றம் என்பதைத் தெளிவாக உறுதிப்படுத்தி உள்ளன. ஆனால் அது உலகில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதைக் காண்பதற்குச் சிறிது காலம் பொறுத்திருக்க வேண்டி உள்ளது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

புதிய திரிபு சர்வதேச அளவில் கவலைகளை ஏற்படுத்தி இருப்பதாக பிரிட்டிஷ் சுகாதார அமைச்சர் சஜித் ஜாவித்(Sajid Javid) நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். புதிய வைரஸ் தோன்றியுள்ள ஆறு ஆபிரிக்க நாடுகளையும் பிரிட்டிஷ் அதிகாரிகள் சிவப்புப் பட்டியலில் சேர்த்து அந்நாடுகளுடனான விமானப் போக்குவரத்துகளை இடைநிறுத்தி உள்ளனர்.

அறிவியல் பெயரில் B.1.1.529 எனக் குறிப்பிடப்படுகின்ற இந்தத் திரிபுக்கு கிரேக்க எழுத்துக்களில் புதிய பெயரை உலக சுகாதார அமைப்பு ஓரிரு தினங்களில் வெளியிடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...