ஊரடங்கை நீக்க திட்டங்கள் வேண்டும்! – சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை

Hemantha Herath

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை எதிர்வரும் திங்கட்கிழமை நீக்குவதானால் அதற்கான சரியான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டை திறக்கும்போது மீண்டும் ஆரம்ப நிலைக்கு சென்றால் கொரோனாத் தொற்று முடிவடையாது என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை எதிர்வரும் திங்கட்கிழமை நீக்குவதானால் தற்போதே பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பிரிவினரால் திட்டம் வகுக்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு திட்டம் வகுக்கப்பட்டால் மட்டும் நாட்டை திறக்கலாம் என்பது குறித்து தீர்மானிக்க முடியுமென்றும் அவ்வாறு திட்டங்கள் வகுக்கப்படாவிட்டால் நாட்டை திறப்பதில் சிக்கல் ஏற்படுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version