வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் ‘பிலவ’ வருட கந்தஷஷ்டி உற்சவம் எதிர்வரும் 05ம் திகதி ஆரம்பமாகி 11ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
சுகாதார துறையினரது அறுவுறுத்தலின்படி பக்தர்கள் வீடுகளில் இருந்து தரிசனம் செய்யும் பொருட்டு நல்லூர் ஶ்ரீ கந்தசுவாமி தேவஸ்தானத்தினால் உற்சவத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை ஆலய உத்தியோகபூர்வ “YouTube” தளத்தில் நேரலையை ஒளிபரப்பப்படவுள்ளது.
ஆகையால் கந்தஷஷ்டி உற்சவ காலத்தில் உற்சவ நேரங்களின் போது நாட்டின் தற்போதைய சுகாதார நடைமுறைகளின்படி பக்தர்கள் ஆலயத்தினுள்ளும் வெளிவளாகத்திலும் ஒன்றுகூடுவதை தவிர்க்கும் பொருட்டு உற்சவ நேரங்களின் போது ஆலயம் வருவதனை தவிர்த்து வீடுகளில் இருந்து தூர தரிசனம் செய்யுங்கள் என தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.
Leave a comment