பொல்லால் அடித்து மூன்று பிள்ளைகளின் தாய் கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும், சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் நுவரெலியா மாவட்டத்துக்குட்பட்ட, வட்டவளை மவுன்ஜீன் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
அயல் குடும்பத்திற்கும், தனது குடும்பத்திற்கும் ஏற்பட்ட கைகலப்பை சமரசப்படுத்த சென்ற பெண்ணொருவரே இவ்வாறு பொல்லால் அடித்து கொல்லப்பட்டுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளின் தாயான சந்திரசேகரன் கலாதேவி (வயது 57) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் வட்டவளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
ஹற்றன் நீதிமன்ற நீதவானின் மரண விசாரணைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஹற்றன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
#SriLankaNews
Leave a comment