இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களில் 50 வீதமானவை வனவிலங்குகளாலும், போக்குவரத்தின்போது அழிவடைகின்றன.” – என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான வசந்த பண்டார நாடாளுமன்றத்தில் இன்று, ” விவசாயிகளால் பயிரிடப்படும் பயிர்ச்செய்கைகளுக்கு வனவிலங்குகளால் பெரும் பாதிப்பு ஏற்படுகின்றது. இதனை தடுப்பதற்கு விசேட வேலைத்திட்டம் அவசியம் என வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த விவசாயத்துறை அமைச்சர்,
” இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் விவசாய உணவுப்பொருட்களில் 45 முதல் 50 வீதமானவை வன விலங்குகளாலும், போக்குவரத்தின்போதும் அழிவடைகின்றன.
காட்டு யானைகளால்தான் பெரும் பாதிப்பு. எனவே, யானை வேலி அமைக்கும் வேலைத்திட்டம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கென தனி அமைச்சே உருவாக்கப்பட்டுள்ளது.
குரங்குத் தொல்லைதான் பெரும் பிரச்சினை. வீடொன்றில் மிளகாய் செடி ஒன்றைக்கூட விட்டு வைப்பதில்லை. இதனை கட்டுப்படுத்துவது தொடர்பில் தற்போது ஆராயப்பட்டுவருகின்றது. வெளிநாடுகளில் கையாளப்படும் முறைமைகள் குறித்தும் கண்காணிக்கப்படுகின்றது.
போக்குவரத்தின்போது அழிவு ஏற்படுகின்றது. எனவே, ரயில்கள் மூலம் விவசாய உற்பத்திகளை கொண்டு செல்வதற்கான வேலைத்திட்டம் இடம்பெறுகின்றது.”- என்றார்.
#SrilankaNews
Leave a comment