maivai
செய்திகள்இலங்கை

போராட்டங்களுக்கு சேனாதிராசாவே தலைமை தாங்குவார் – தமிழரசு கட்சி அறிவிப்பு

Share

வடக்கு, கிழக்கில் விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை முன்னிறுத்தி நாளையும் நாளை மறுதினமும் நடத்தப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. அறிவித்துள்ள போராட்டங்களுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவே தலைமை தாங்குவார்.

நேற்று தமிழரசு கட்சிப் பிரமுகர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் ‘சூம்’ வழியாக ஒன்றுகூடி ஆராய்ந்த சமயம் இத்தகைய தீர்மானம் எடுக்கப்பட்டது.

தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா, பதில் பொதுச்செயலாளர் மருத்துவர் சத்தியலிங்கம், கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவர்களான சி.வீ.கே.சிவஞானம் மற்றும் பொன். செல்வராசா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன் மற்றும் சீ.யோகேஸ்வரன் ஆகியோருடன் சுமந்திரன் எம்.பியும் இந்த கலந்தாலோசனையில் பங்குபற்றினார்.

கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும், விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினைகளை வலியுறுத்தும் விதத்தில் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் இந்தக் கூட்டத்தில் கருத்து வெளியிட்டார்.

இதேவேளை, காணி அபகரிப்பு மற்றும் ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் இத்தகைய போராட்டம் ஒன்று நடத்தப்பட வேண்டும் என்று நேற்றைய கூட்டத்தில் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா வலியுறுத்தினார்.

நாளை நாளைமறுதினமும் நடத்தப்பட இருக்கும் போராட்டங்களை கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா அங்கீகரிக்கவில்லை என்ற சாரப்பட இணையத்தளம் ஒன்றில் வெளிவந்த செய்தியை அவர் மறுத்தார். இந்தப் போராட்டத்தில் பங்களிப்பும் ஈடுபாடும் இருப்பதால்தான் தான் இந்தச் ‘சூம்’ கூட்டத்தில் பிரசன்னமாகி இருக்கின்றேன் எனவும் மாவை சேனாதிராசா அங்கு குறிப்பிட்டார்.

நேற்றிரவு சுமார் ஒரு மணி நேரம் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 9
இலங்கைசெய்திகள்

உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையின் தென் மாகாணம்

உலகின் மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையை கொண்ட இலங்கையின் தெற்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆயுட்காலம்...

29 7
இலங்கைசெய்திகள்

கொழும்பின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்..! வெளியான தகவல்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி கையில் செல்வது உறுதியாகிவிட்டதாக ஆளுங்கட்சிக்கு நெருக்கமான...

27 9
இலங்கைசெய்திகள்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது....

25 9
இலங்கைசெய்திகள்

டுபாயில் இருந்து வந்த உத்தரவு..! கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டின் மர்மம்

கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்று(16.05.2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, டுபாயில் மறைந்திருக்கும் பாதாள உலக உறுப்பினர் பழனி...