Explosives Found at Umayalpuram in Kilinochchi Including Mortar Bombs
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கிளி. உமையாள்புரத்தில் மேலும் பல வெடிபொருட்கள் மீட்பு!!

Share

கிளிநொச்சி, உமையாள்புரம், சோலை நகர் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து பெருந்தொகையான பழைய எறிகணைகள் மற்றும் வெடிபொருட்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை எறிகணை ஒன்றினை வீட்டுக்குள் வைத்து கிறைன்டரினால் வெட்டியபோது வெடித்ததில் 25 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார்.

இதேவேளை 13 வயதுடைய சிறுவன் ஒருவனும் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சம்பவம் இடம்பெற்ற வீட்டில் ஒரு சில வெடிபொருட்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து விசேட அதிரடிப் படையினரும் பொலிசாரும் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த வீட்டிலிருந்தும் வீட்டு காணிக்குள் இருந்தும் பெருந்தொகையான வெடிபொருட்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளன.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
அருந்திக பெர்னாண்டோ
இலங்கை

CCIB இல் இருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகி இருந்தார். டுபாயிலிருந்து...

மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ
இலங்கை

ராஜபக்சர்களின் மற்றுமொரு சகா உயிரிழப்பு – நீளும் மர்மங்கள்!

  நேற்றைய தினம், ராஜபக்சர்களின் மிகவும் நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில்...

Namal
இலங்கை

மீண்டும் உருவாகும் ராஜபக்சர்கள் யுகம் – பொதுவெளியில் முழங்கிய இந்திக அனுருத்த!

  ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிக்க இலங்கை மக்கள் தயாராகியுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின்...

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...