LakshmanKiriella
செய்திகள்அரசியல்இலங்கை

சிறுபான்மையின மக்களுக்காக நேசக்கரம் நீட்டியவரே மங்கள! – லக்‌ஷ்மன் கிரியல்ல

Share

” மங்கள சமரவீர மனித உரிமைகளை மதித்தவர். சிறுபான்மையின மக்களுக்காக நேசக்கரம் நீட்டியவர்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுவரும் அமரர் மங்கள சமரவீரவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் பிரேரணைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில்தான் அவர் இவ்வாறு கூறினார்.

” மங்கள சமரவீர அரசியலில் புரட்சி செய்தவர். 1989 ஆம் ஆண்டு தாய்மார் முன்னணியை உருவாக்கினார். காணாமல்போனவர்கள் பட்டியலை தயாரித்தார். அந்த பட்டியலையே தற்போதைய பிரதமர் அன்று ஜெனிவாவுக்கு எடுத்துச்சென்றார். எனினும், அவர் விமான நிலையத்தில் தடுக்கப்பட்டார்.

மங்கள சமரவீர சிறுபான்மையின மக்களுக்கு நேசக்கரம் நீட்டியவர். நீதியின் பக்கம் நின்றவர். அதனால்தான் அவர் வெளிவிவகார அமைச்சராக செயற்பட்ட காலத்தில் எமது நாட்டுக்கு ஆதரவு கிட்டியது.

பொதுத்தேர்தலில் போட்டியிடவில்லை என மங்கள அறிவித்தபோது நாம் வியப்படைந்தோம். ஆனால் இளைஞர்களை ஒன்றுதிரட்டி ஓர் அமைப்பை ஆரம்பித்தார். அவர் எப்போதும் தூரநோக்கு சிந்தனை அடிப்படையில் செயற்பட்டவர்.” – என்றார் கிரியல்ல.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 15
உலகம்செய்திகள்

டொனால்ட் டிரம்ப் வருகைக்கு முன்னதாக ஈரான் – சீனா அமைச்சர்கள் பேச்சுவார்த்தை: மத்திய கிழக்கில் சீனாவின் முக்கியத்துவம் அதிகரிப்பு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இப்பிராந்தியத்திற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக ஈரான்...

Untitled 14
செய்திகள்உலகம்

லண்டனில் யூத சமூகத்தினருக்காகப் பிரத்யேக பொலிஸ் பிரிவு: பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த முடிவு

லண்டனில் யூத சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக அண்மைக்காலமாக அதிகரித்து வரும் அச்சுறுத்தல்கள் மற்றும் வெறுப்புணர்வுத் தாக்குதல்களைத்...

Untitled 13
செய்திகள்இந்தியா

தமிழகத்தில் புதிய அரசியல் மாற்றம்: காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியமைக்கத் தயாராகும் விஜய்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 108 இடங்களைக் கைப்பற்றியுள்ள...

Untitled 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் வசிக்கும் மாலத்தீவினரின் விசா சிக்கல்கள்: நிரந்தரத் தீர்வு குறித்து ஜனாதிபதி முய்ஸு உறுதி

இலங்கைக்கு உத்தியோகபூர்வ அரசமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள மாலத்தீவு ஜனாதிபதி டாக்டர் முகமது முய்ஸு, கொழும்பில் வசிக்கும்...