ஆட்சியை முன்னெடுக்க பெரும்பான்மை பலம் அவசியமில்லை!

Pirasanna Ranathunka

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆதரவு எமக்கு தேவையில்லை. ஆட்சியை முன்னெடுப்பதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலமும் அவசியமில்லை.” – என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த அரசின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சின் கைகளிலுயே தங்கியிருப்பதாக அக்கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டிருந்த அறிவிப்பு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“இப்படியெல்லாம் பிரச்சினை வரும் என தெரிந்துதான், சுதந்திரக்கட்சிக்காரர்களுக்கு வேட்புமனு வழங்க வேண்டாம் என நான் அன்றே வலியுறுத்தினேன்.

தற்போது அரசில் இருக்க முடியாவிட்டால் வெளியேறட்டும். அதனால் எமக்கு பாதிப்பு இல்லை.

அரசுக்குள் இருந்துகொண்டு – சிறப்புரிமைகளை அனுபவித்தபடி விமர்சனங்களை முன்வைப்பதைவிடவும், வெளியேறுவதே நல்லது.” என்றும் அமைச்சர் பிரசன்ன குறிப்பிட்டுள்ளார்.

#SrilankaNews

Exit mobile version