முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு பெரும் அநீதி இழைத்துள்ளார் – என்று அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியென்பது பாரிய பாரம்பரியக் கட்சியாகும். அக்கட்சியை 2015 ஜனவரி மாதம் சிறிகொத்தவுக்கு கொண்டுசென்று, ஐக்கிய தேசியக்கட்சியிடம் அடகு வைத்தவர்தான் மைத்திரிபால சிறிசேன. அதனால்தான் சுதந்திரக்கட்சி சீரழிந்தது. அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டது.
தற்போது மீண்டும் ஒருமுறை சஜித்திடம் சென்று, கட்சியை சரணடைய வைக்க பார்க்கின்றார். மைத்திரிபால சிறிசேனவும் ஜனாதிபதியாக இருந்தார். அவரை ஆட்சிக்கு கொண்டுவந்தவர்களே அவரை கடுமையாக விமர்சிக்கின்றனர்.
சுதந்திரக்கட்சியை பாதுகாக்க வேண்டுமெனில் அக்கட்சியை முதலில் மைத்திரியிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.” – என்றார்.
#Srilankanews
Leave a comment