” விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தற்போது நாடகங்களை அரங்கேற்றி வருகின்றார்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” தெரிவுசெய்யப்பட்ட சில வயல் நிலங்களுக்கு தற்போது விவசாயத்துறை அமைச்சர் செல்கின்றார். விவசாயிகள் எனக் கூறப்படும் சிலருடன் கலந்துரையாடுகின்றார். அறுவடை எப்படி என அவர் கேட்க, சிறப்பு சேர் என விவசாயிகள் எனக் கூறிக்கொள்பவர்கள் பதில் வழங்குகின்றனர்.
நாட்டிலுள்ள ஒட்டுமொத்த விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு சிலரை தூண்டிவிட்டு விவசாயத்துறை அமைச்சர் நாடகங்களை அரங்கேற்றி வருகின்றார். அவருக்கு விவசாயிகள் தக்க பதிலை வழங்குவார்கள்.” – என்றார்.
அதேவேளை, விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.
#SriLankaNews
Leave a comment