மாவீரர் நினைவேந்தலுக்கு தடைவிதிக்க கோரி மன்னார் நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம், மன்னார் நீதவானால் நிராகரிக்கப்பட்டது.
நாளைய தினம் மன்னாரில் மாவீரர் நினைவேந்தல் இடம்பெறவுள்ளது என தெரிவித்து மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் இன்று தாக்கல் செய்யப்பட விண்ணப்பமே நிராகரிக்கப்பட்டுள்ளது.
விசாரணையை மேற்கொண்ட நீதவான், தகுந்த சாட்சிகள் இல்லை என தெரிவித்து குறித்த விண்ணப்பத்தை நிராகரித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன் , மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன், உப- தவிசாளர் எஸ்.ஜாட்சன், நகர சபை உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ் மற்றும் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் ஆகிய 6 பேருக்கும் எதிராகவே மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க தடை விதிக்க கோரி விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment