கொழும்பு, முகத்துவாரம் (மோதரை) – ரெட்பாணாவத்தை எனும் இடத்தில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வாகனம் ஒன்றில் வந்த மர்மக் கும்பல் இந்தத் துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
24 வயதுடைய வினோதன் என்ற இளைஞரே துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கடந்த சில நாட்களில் கொழும்பிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் 5 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதில் ஐவர் கொல்லப்பட்டனர். எனினும், இந்தத் தாக்குதல்களை நடத்தியவர்கள் எவரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
#SriLankaNews
Leave a comment