mahinda 1
அரசியல்இலங்கைசெய்திகள்

மஹிந்த மீண்டும் பிரதமராகலாம்! – பஸில் கூறுகின்றார்

Share

பிரதமர் பதவியிலிருந்து விலகிய மஹிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமராகினாலும் அதிசயம் இல்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நிறுவுநரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரான மஹிந்த ராஜபக்ச அழுத்தங்களுக்கு அடிபணிந்து பிரதமர் பதவியிலிருந்து விலகவில்லை. அவர் சுயவிருப்பின் பேரிலேயே பதவி விலகினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியிடமே பெரும்பான்மைப் பலம் தொடர்ந்தும் உள்ளது. எனவே, பிரதமர் பதவியிலிருந்து விலகிய மஹிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமராகினாலும் அதிசயம் இல்லை.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சுயவிருப்பத்துக்கிணங்கவே புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டார். அதற்காக ரணிலின் நியமனத்துக்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினர் எதிர்ப்பு என்று அர்த்தம்கொள்ள முடியாது.

ஜனாதிபதி – பிரதமர் இணைந்து முன்னெடுக்கும் நாட்டின் முன்னேற்றகரமான அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆதரவு வழங்கும்” – என்றார்.

#SriLankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
அருந்திக பெர்னாண்டோ
இலங்கை

CCIB இல் இருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகி இருந்தார். டுபாயிலிருந்து...

மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ
இலங்கை

ராஜபக்சர்களின் மற்றுமொரு சகா உயிரிழப்பு – நீளும் மர்மங்கள்!

  நேற்றைய தினம், ராஜபக்சர்களின் மிகவும் நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில்...

Namal
இலங்கை

மீண்டும் உருவாகும் ராஜபக்சர்கள் யுகம் – பொதுவெளியில் முழங்கிய இந்திக அனுருத்த!

  ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிக்க இலங்கை மக்கள் தயாராகியுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின்...

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...