download 9 1 1
இலங்கைசெய்திகள்

இளநீர் ஏற்றுமதி நடவடிக்கை!

Share

தேங்காய் தண்ணீர் மற்றும் இளநீருக்கு வெளிநாட்டு சந்தையில் மிக அதிக தேவை உருவாகி வருவதாக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

வெளிநாட்டு சந்தையில், தேங்காய் நீர் ஒரு ஆற்றல் பானமாக விற்கப்படுகிறது. மேலும் ஒரு லீட்டர் தேங்காய் தண்ணீர் கொண்ட ஒரு பொதி வெளிநாட்டு சந்தையில் 4-5 அமெரிக்க டொலர்களுக்கு விற்கப்படுகிறது.

இலங்கையில் இளநீரை ஏற்றுமதி செய்யும் நடவடிக்கை வெற்றிகரமாக நடந்து வருகிறது. ஆனால் தேங்காய் தண்ணீரை பொதி செய்து விற்பதில் கவனம் செலுத்துவதில்லை.

நாட்டின் மொத்த தேங்காய் உற்பத்தியில், உள்நாட்டு நுகர்வு தவிர, பெரும்பாலான தேங்காய்கள் கொப்பரை உற்பத்தித் தொழிலுக்கு பயன்படுத்தப்படுகின்றன.

அதிக அளவு தேங்காய் தண்ணீர் வீணாகிறது என்று தென்னை ஆராய்ச்சி நிறுவனம் கண்டறிந்துள்ளது.

எனவே பயன்படுத்தாமல் தூக்கி எறியப்படும் தேங்காய் நீரை பொதி செய்து அந்நியச் செலாவணியை ஈட்ட வாய்ப்பு உள்ளதாக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிடுகிறது.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு: சமுர்த்தி திணைக்களம் தகவல்!

நாட்டில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர், அவர்களைப் பொருளாதார ரீதியாக...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க வந்தடைந்த இரு கப்பல்கள்: தடையின்றி விநியோகம் செய்ய உறுதி!

நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு...

Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலைகள் அதிரடி உயர்வு: இன்று நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது...

Untitled 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு: 6-ஆம் நாளில் மேலும் இரண்டு எலும்புக்கூடுகள் மீட்பு!

யாழ்ப்பாணம், செம்மணி சித்துபாத்தி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சியின் ஆறாம் நாள்...