tamilni 2 scaled
இலங்கைசெய்திகள்

தென்னிலங்கையில் மாயமான யுவதி

Share

தென்னிலங்கையில் மாயமான யுவதி

ஹிக்கடுவ பகுதியில் யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 15ஆம் திகதி முதல் 18 வயதுடைய யுவதியொருவர் காணாமல் போயுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலி தொடம்துவ பிரதேசத்தில் வசிக்கும் யுவதி அன்றைய தினம் காலி பிரதான பேருந்து நிலையத்தில் இருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியிருந்தார்.

இவரைப் பற்றி தகவல் தெரிந்தால் பொதுமக்கள் தமக்கு தகவல் தெரிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

“கடந்த 17ஆம் திகதி இரவு 9.28 மணிக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.. என் மகள் தான் அழைப்பு எடுத்தார்.

தயவு செய்து என்னைத் தேடாதீர்கள் அம்மா.. என்னால் வரமுடியாமல் போகும். பொலிஸாரிடம் போக வேண்டாம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரத்தில் அங்கிருந்த ஒரு பெண் என்னிடம் பொலிஸாரிடம் செல்ல வேண்டாம் என என்னிடம் கூறியதாக தாயார் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
ஹட்டன் கல்வி வலயம்
இலங்கை

ஹட்டன் கல்வி வலயம் வெளியிட்டுள்ள தகவல்.

சீரற்ற வானிலை பாதிப்பை கருத்திற் கொண்டு நேற்று முன்தினம் முதல் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு...

ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ
இலங்கை

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநர் பதவியேற்பு!

ஜனாதிபதி செயலகத்தில், மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற சமூக மருத்துவ நிபுணர் ஹர்ஷ...

அகில விராஜ் காரியவசம் 2
இலங்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்!

  வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் முன்னாள் அமைச்சர் அகில விராஜ்...

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாள
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாளர்.

இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இன்று பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை கொழும்பில்...