9 22
இலங்கை

யாழில் நிமோனியா காய்ச்சல் காரணமாக இளம் குடும்ப பெண் உயிரிழப்பு

Share

யாழில் நிமோனியா காய்ச்சல் காரணமாக இளம் குடும்ப பெண் உயிரிழப்பு

யாழில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளம் குடும்ப பெண்ணொருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

கோப்பாய் தெற்கு, வீரபத்திரர் கோயில் வீதியைச் சேர்ந்த 44 வயதுடைய குடும்ப பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியிலும் ஊழியராக கடமை புரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் தனக்கு காய்ச்சல் என தெரிவித்து கடந்த 11ஆம் திகதி வீடு திரும்பியிருந்த நிலையில், வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து சடலம் மீது மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளின் போது நிமோனியா தொற்று ஏற்பட்டதன் காரணமாக அவர் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதுடன், உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...

india 12
அரசியல்இலங்கைசெய்திகள்

பிரபாகரனின் மகன் மரணம் குறித்து போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்: பாராளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தல்

இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழான விதிகள் மற்றும் அத்தியாவசிய பொதுச்சேவைகள் சட்டத்தின் கீழான தீர்மானம்...

india 11
அரசியல்இலங்கைசெய்திகள்

பாடகர் சங்கீத்ஷன் கைது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது

கிளிநொச்சி உதயநகர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த சொல்லிசைப் பாடகர் (Rapper) கணேஸ்குமார் சங்கீத்ஷன் பயங்கரவாதத் தடைச்...

india 10
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

புதுக்குடியிருப்பு புதையல் அகழ்வு விவகாரம்: சிஐடி சார்ஜன்ட் பணியிடை நீக்கம்

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புதையல் தோண்டுவதற்காக, உலோகப் பொருட்களைக் கண்டறியும் நவீன ஸ்கேனர் (Scanner) இயந்திரத்தைக்...