sajith 3 2
அரசியல்இலங்கைசெய்திகள்

பெருமையடித்து நாட்டை கட்டியெழுப்ப முடியாது!

Share

நாட்டுக்குத் தேவை அடக்குமுறையல்ல எனவும், அபிவிருத்தியே தேவை எனவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்கம் அடக்குமுறையையே அமுல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

பெருமையடித்து நாட்டை கட்டியெழுப்ப முடியாது என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இதயசுத்தியுடன் சேவை செய்வதே மேற்கொள்ள வேண்டியுள்ள தேவை எனவும் தெரிவித்தார்.

மக்களுக்கு தாம் வாழ்வதற்கான போராட்டமே உள்ளதாகவும்,தனது அதிகாரத்தைக் தக்க வைத்துக் கொள்வதான போராட்டமே அரசாங்கத்திற்குள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தமது பிள்ளைகளுக்கு சரியான உணவை வழங்கி கல்வியை வழங்குவதற்கே பெற்றோர்கள் போராடுவதாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர்களை நியமிப்பது தொடர்பான போராட்டமே அரசாங்கத்திற்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நாட்டின் இளம் தலைமுறையினர் தொழில் செய்து தலை நிமி்ர்ந்து வாழ்வதற்கான போராட்டத்திலையே ஈடுபட்டுள்ள போது, அரசாங்கம் இளைஞர்களை ஒடுக்குவதாகவும், இந்நாட்டின் குழந்தைகள் அழகான நாட்டை உருவாக்க கனவு காணும்போது டீல் போட்டு பணம் சம்பாதிக்கும் போராட்டத்திலையே அரசாங்கம் ஈடுபட்டுவருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாடு வீழ்ந்துள்ள பாதாளத்தில் இருந்து மீட்பதற்கு எந்நேரத்திலும் பட்டம் பதவிகள் இன்றி அரசாங்கத்திற்கு ஒத்துழைக்கத் தயார் எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இதற்கான உண்மையான விருப்பை அரசாங்கம் கொண்டிருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸால் நாடு கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த வேளையில் நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியினால் மூச்சுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இன்று இது மிகவும் வெற்றிகரமானதொரு வேலைத்திட்டமாக இயங்கி வருவதாகவும் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 1
செய்திகள்இலங்கைவிளையாட்டு

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தோல்வி: கிரிக்கெட்டை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ!

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய வீழ்ச்சி குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள நாமல் ராஜபக்ஷ, தோல்விக்கான...

24 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யுத்த கால ஊடகவியலாளர் படுகொலைகள்: உண்மைகளைக் கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும் – ரவூப் ஹக்கீம்!

மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு மற்றும் “பாரதி ஒரு மனிதாபிமான...

23 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரசியல் இருப்புக்கு போராளிகள் தேவை, ஆனால் அவர்களின் தேவைகள் புறக்கணிப்பு: சிவகுரு மதிவண்ணன் குற்றச்சாட்டு!

புனித பூமி மக்கள் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு மதிவண்ணன் நேற்று (மார்ச் 1)...

22 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அவசரகால நிலையை நீட்டிக்க அரசாங்கம் பரிசீலனை!

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ, நாடு...