நாட்டின் பொருளாதாரத்துக்கு பங்காளிக்கும் தெரிவுசெய்யப்பட்ட விசேட துறைகள், தமக்கு தேவையான எரிபொருளை தாமே நாட்டுக்கு இறக்குமதி செய்ய முடியும்.
இதற்கான அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் விரைவில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, தெரிவுசெய்யப்பட்ட பொருளாதார துறையினருக்கு பெற்றோலியப் பொருட்கள் இறக்குமதிக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு ஏற்ற வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன்படி, 2002 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக சட்டமூலம் தயாரிக்கப்படவுள்ளது.
இந்த சட்டமூலத்தை தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக எரிசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment