15 2
இலங்கைசெய்திகள்

உலக செஸ் சாம்பியன் குகேஷ்க்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு

Share

உலக செஸ் சாம்பியன் குகேஷ்க்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு

தமிழகத்தைச் சேர்ந்த உலக செஸ் சாம்பியன் குகேஷ்க்கு (Gukesh Dommaraju) கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் ( Singapore) நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் தொடரின் வெற்றியாளர் பட்டத்தை இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ் (Kukesh) தன்வசப்படுத்தினார்.

நடப்பு செம்பியனான சீனாவின் (China) டிங் லிரென்குடன் இடம்பெற்ற இறுதிப்போட்டியிலேயே அவர் குறித்த வெற்றியை பெற்றார்.

13 சுற்றுகள் முடிவில் இருவரும் தலா இரண்டு சுற்றுகளில் வெற்றி பெற்று இருந்த நிலையில், இதனால் இருவரும் 6½ புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தார்கள்.

இந்தநிலையில்,14 ஆவது மற்றும் கடைசி சுற்று சிங்கப்பூரில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது.

58 ஆவது காய் நகர்த்தலுக்குப் பிறகு டிங் லிரென் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார் இதனால் 18 வயதில் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை குகேஷ்க்கு வென்று தன்வசப்படுத்தினார்.

இந்நிலையில், மத்திய அரசு விளையாட்டு வீரர்களுக்கான கேல் ரத்னா விருதுகளை அறிவித்துள்ளது.

இதன்படி உலக செஸ் சாம்பியன் குகேஷ்க்கு மத்திய அரசின் மிக உயரிய விருதான கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற வீராங்கனை மனு பாக்கருக்கும் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Mahara Prison
இலங்கை

மஹர சிறைச்சாலையில் ஒருவர் பலி – பலர் படுகாயம்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மேலும் காயமடைந்த 6...

Featuredc
இலங்கை

மஹர சிறையில் ஏற்பட்ட மோதல் – ராகமயில் பொலிஸ் ஊரடங்கு.

ராகம பொலிஸ் எல்லைக்குள் மறு அறிவிப்பு வரும் வரை பொலிஸ் ஊரடங்கு உடனடியாக நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. மஹர...

sgdh
இலங்கை

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட போதைப்பொருட்கள்.

பெங்கொக் நகரிலிருந்து கடந்த ஜூலை 24ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த விமானமொன்றில், பரிசுப் பொருட்கள் அடங்கிய...

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி
இலங்கை

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி.

காட்டு யானை தாக்கியதில் தும்பகல்ல, குடாஓய பகுதியில் பதுளுவெலவை சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்....