13 25
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு உலகவங்கி காட்டிய பச்சைக்கொடி

Share

ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு உலகவங்கி காட்டிய பச்சைக்கொடி

இலங்கையின்(sri lanka) பொருளாதார மீட்சி மற்றும் அபிவிருத்திக்கு ஆதரவளிக்கும் வகையில் உலக வங்கி (world bank)தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி அநுர குமாரவுக்கு அனுப்பி வைத்துள்ள உத்தியோகபூர்வ கடிதத்தில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கான துணைத் தலைவர் மார்ட்டின் ரைசர்(Martin Raiser) மற்றும் சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான துணைத் தலைவர் ரிக்கார்டோ புலிட்டி(Riccardo Puliti) ஆகியோர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(anura kumara dissanayake) இலங்கையின் 9வது நிறைவேற்று ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதற்கு அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

நாட்டின் பொருளாதார மறுசீரமைப்புக்கு அரசின் தொடர் கவனம் தேவை என்பதை அங்கீகரிக்கும் அதே வேளையில், ‘வளர்ச்சி, செழிப்பு மற்றும் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் சமமாக முக்கியத்துவம் வாய்ந்தவை’ என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நிர்வாகத்தின் தலைமையின் கீழ் உள்ளடங்கிய வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், நாட்டின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும் உலக வங்கியின் உறுதிப்பாட்டை இந்தக் கடிதம் உறுதிப்படுத்துகிறது.

Share
தொடர்புடையது
ஹட்டன் கல்வி வலயம்
இலங்கை

ஹட்டன் கல்வி வலயம் வெளியிட்டுள்ள தகவல்.

சீரற்ற வானிலை பாதிப்பை கருத்திற் கொண்டு நேற்று முன்தினம் முதல் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு...

ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ
இலங்கை

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநர் பதவியேற்பு!

ஜனாதிபதி செயலகத்தில், மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற சமூக மருத்துவ நிபுணர் ஹர்ஷ...

அகில விராஜ் காரியவசம் 2
இலங்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்!

  வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் முன்னாள் அமைச்சர் அகில விராஜ்...

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாள
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாளர்.

இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இன்று பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை கொழும்பில்...