rtjy 172 scaled
இந்தியாஇலங்கைசெய்திகள்

காசாவில் இருந்து மீட்கப்பட்ட இந்திய பெண்கள்

Share

காசாவில் இருந்து மீட்கப்பட்ட இந்திய பெண்கள்

இஸ்ரேலிய படைகளின் தாக்குதலால் நிலை குலைந்திருக்கும் காசாவில் காஷ்மீரை சேர்ந்த லுப்னா நசீர் ஷாபூ என்ற பெண்ணும், அவரது மகள் கரிமாவும் வசித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் போர் உக்கிரம் அடைந்ததை தொடர்ந்து தங்களை மீட்குமாறு மத்திய அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து இஸ்ரேல் மற்றும் எகிப்தின் கெய்ரோவில் உள்ள இந்திய தூதரகங்கள் அவர்களை பத்திரமாக மீட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து அவர்கள் கடந்த 13ஆம் திகதி காசா எல்லையை கடந்து எகிப்தின் கெய்ரோ சென்றடைந்த நிலையில் அங்கிருந்து காஷ்மீர் திரும்ப இருப்பதாக லுப்னா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனியார் நிறுவனமொன்றிற்கு அவர் அளித்த நேர்காணலில் தெரிவித்ததாவது,

“காசாவில் இருந்து ரபா எல்லை வழியாக பத்திரமாக வந்தோம். தற்போது காஷ்மீர் திரும்புவதற்காக காத்திருக்கிறேன்.

காசாவில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. எங்களிடம் தண்ணீர், மின்சாரம் மற்றும் இணையம் எதுவும் இல்லை. தொலைத்தொடர்பு மிகவும் மோசமாக இருந்தது. நாங்கள் அங்கு மிகவும் மோசமான நிலையில் இருந்தோம். நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது.

தினம் தினம் செத்து மடிவோரும் உண்டு, காயம் அடைபவர்களும் உண்டு, இடிபாடுகளுக்கு அடியில் கிடப்பவர்களும் உண்டு. தன்னை மீட்டதற்காக மத்திய அரசுக்கும், இந்திய தூதரகங்களுக்கும் நன்றி”என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...