ranil modi..
அரசியல்இந்தியாஇலங்கைசெய்திகள்

இலங்கை மக்களின் விருப்பங்கள் நிறைவேறும்! – ரணிலுக்கு மோடி வாழ்த்து

Share

இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தனது வாழ்த்துக் கடிதத்தில்,

இலங்கையின் 8-வது ஜனாதிபதியாக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கைக்கு நெருக்கடியான காலத்தில் நீங்கள் இந்தப் பதவியை ஏற்று இருக்கிறீர்கள்.

உங்களின் பதவிக்காலத்தில் பொருளாதார ஸ்திரத்தன்மை மேம்படுவதுடன் இலங்கையின் அனைத்துக் குடிமக்களின் விருப்பங்களும் நிறைவேறும் என நான் நம்புகிறேன்.

இலங்கையில் நிறுவப்பட்ட ஜனநாயக வழிமுறைகள், அமைப்புகள் மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்பின் மூலம் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கான தேடலுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை அடுத்து மக்கள் போராட்டம் வெடித்த நிலையில், ஜனாதிபதியாகவிருந்த கோட்டபாய ராஜபக்ச பதவி விலகிய நிலையில், இடைக்கால ஜனாதிபதியாக செயற்பட்டு வந்த ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்றத்தில் அதிக வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews #India

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...