வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா வடக்கு ஒரு தனி நாடு என்பதைப் போலவும், அவர் ஜனாதிபதியைப் போலவுமே, அவரது செயற்பாடு அமைந்துள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலங்கம் தெரிவித்துள்ளார்.
இன்று (06) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம், ஆரியகுளத்தில் பொதுமக்களின் சமய உரிமையை மீறும் வகையில் செயற்படும் அதிகாரம் மாநகர சபைக்குக் கிடையாது என்று சாரப்பட – மாநகர சபையை அச்சுறுத்தும் பாணியில் யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளருக்கு வடக்கு மாகாண ஆளுநர் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார்.
இதன் பின்னணியின் அடிப்படையில் ஊடக சந்திப்பை நடாத்திய வேளையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
கண்டிவாவிக்குள் பிள்ளையார் கோயிலைக் கட்டினால் விடுவீர்களோ? ஆளுநர் என்ற வகையில் உறுஞ்சுகின்ற வகையில் செயற்பாடுகள் இருக்கின்றன.
அனைத்து விடயங்களையும் தகவலறியும் சட்டத்தின் மூலம் பகிரங்கப்படுத்தத் தயார். வருவீர்களா விவாதத்திற்கு என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலங்கம் கேள்விக்கணைகளைத் தொடுத்துள்ளார்.
#SrilankaNews
Leave a comment