Tiss Athanayakka
இலங்கைஅரசியல்செய்திகள்

ஜனாதிபதி செயலாளரின் பதவி விலகலால் பொருளாதாரப் பிரச்சினை தீருமா?

Share

ஜனாதிபதி செயலாளர் பிபீ ஜயசுந்தர பதவி விலகுவதால் நாட்டில் பொருளாதாரப் பிரச்சினைகள் தீர்ந்துவிடாது.

எனவே, தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு ஒட்டுமொத்த அரசும் பொறுப்புக்கூறவேண்டும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” இரசாயன உரத்துக்கு தடை விதித்துவிட்டு 24 மணிநேரத்துக்குள் சேதன பசளையை நோக்கி நகரும் தவறான முடிவை இந்த அரசு எடுத்தது. இதன் விளைவாக நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் அரிசி தட்டுப்பாடு ஏற்படும். குறிப்பாக அடுத்த இரு மாதங்களில் அரிசி விலை 400 ரூபாவரை உயரும். தற்போது ஒரு கிலோ கீரி சம்பா 250 ரூபாவுக்கு விற்கப்படுகின்றது.

நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என விவசாயத்துறை அமைச்சின் முன்னாள் செயலாளர் அறிவித்தார். அவரின் அறிவிப்பு சரியானது. எனினும், அதற்காக அவர் பதவி விலக்கப்பட்டுள்ளார்.

தற்போதைய நிலைக்கு ஜனாதிபதி செயலாளர் பிபீ ஜயசுந்தரவே காரணம் என சிலர் விமர்சிக்கின்றனர். அரசின் தவறாக முடிவுகளே காரணம். எனவே, ஒட்டு மொத்த அரசும் பொறுப்பு கூறவேண்டும்.” – என்றார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 3 5
செய்திகள்இலங்கை

பேருந்து விபத்துக்களைத் தடுக்க நடமாடும் போதைப்பொருள் சோதனைப் பேருந்து அறிமுகம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்தார்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பயணப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக்...

articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

farmers scaled 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு...