ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது.
அடுத்த வாரமளவில் நடைபெறவுள்ள அச்சந்திப்பில் தீர்க்கமான சில முடிவுகள் எட்டப்படவுள்ளன.
மைத்திரிமீதும், சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள்மீதும் மொட்டு கட்சி உறுப்பினர்கள் தொடர் தாக்குதலை தொடுத்துவருகின்றனர்.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே அடுத்தக்கட்ட நகர்வுகள் பற்றி ஆராய்வதற்கு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புக்கு சுதந்திரக்கட்சி ஆதரவாக வாக்களித்தது. இந்நிலையில் மூன்றாம் வாசிப்பு எதிர்வரும் 2ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதன்போது ஆதரவளிப்பதா என்பது பற்றியும் இதன்போது ஆராயப்பட்டு தீர்மானமொன்று எடுக்கப்படவுள்ளது.
#SriLankaNews
Leave a comment