கறுப்பு பூஞ்சை பரவலாக அடையாளம்!
நாட்டில் பரவலாக, கரும் பூஞ்சை நோய் தாக்கிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் கொழும்பு தேசிய மருத்துவமனை, குருநாகல் மற்றும் இரத்தினபுரி ஆகிய இடங்களில் கறுப்பு பூஞ்சை நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.
இதற்கு முன்னரும் நாட்டில் கறுப்பு பூஞ்சை நோயுடன் சிலர் அடையாளம் காணப்பட்டிருப்பினும் இந்த நோய் கொரோனா நோயாளர்கள் மத்தியில் அடையாளம் காணப்பட்டிருக்கவில்லை.
ஆனால் தற்போது கொரோனா நோயாளர்கள் சிலரும் கறுப்பு பூஞ்சை நோயுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடையும்போது இந்த நோய் அவர்களைத் தாக்குகிறது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் தொற்று அல்லாத நோய் உள்ளவர்களுக்கும் இது உருவாக வாய்ப்பு உள்ளது .
முகத்தில் அல்லது உடலில் ஏதேனும் வித்தியாசமான பருக்கள் மற்றும் அடையாளங்கள் ஏற்படின் உடனடியாக வைத்தியரை அணுகவேண்டும். மருத்துவ ஆலோசனை இன்றி மருந்து பொருள்களை பெற்றுக்கொள்ளக்கூடாது.
எவ்வாறிருப்பினும் இந்த கருப்பு பூஞ்சைத் தொற்று ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் அபாயம் இல்லை – என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a comment