மதுக்கடைகளுக்கு அனுமதி வழங்கியது யார்? – நாமல் கேள்வி
மதுக்கடைகளை திறப்பது தொடர்பாக அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என்று தெரிவித்துள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச, மதுக்கடைகளை திறக்க அனுமதி வழங்கியது யார் எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
தங்காலையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவர் இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டை திறப்பதற்கு ஒரு நிமிடமுள்ளபோது மதுக்கடைகள் நிரம்பி வழிந்தால் அதனைத் தாண்டி நாம் எங்கு சென்றுகொண்டிருக்கிறோம்’ என்பதனை இரண்டு முறை யோசிக்க வேண்டும்.
மதுக்கடைகளை திறப்பது தொடர்பாக பிழையான தகவல்கள் பரவியுள்ளன. அரசாங்கமோ, கொரோனா தடுப்பு குழுவோ இத்தகைய தீர்மானத்தை மேற்கொள்ளவில்லை.
மருத்துவர்களின் ஆலோசனையின்படி கொரோனாத் தொற்றை குறைக்கும் நோக்கிலேயே கொரோனா தடுப்புக்குழு தீர்மானம் மேற்கொள்ளும்.
எவ்வளவு பொருளாதார கஷ்டங்கள் இருந்தாலும், பயணக் கட்டுப்பாடுகள் அமுலிலிருந்தாலும், கூலி வேலைகள் இல்லை என்றாலும் மதுக்கடைகளை திறந்தவுடன் நீண்டவரிசையில் மக்கள் நிரம்பி வழிந்ததை அவதானிக்க முடிந்தது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a comment