நாட்டில் கோதுமை மாவின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
செரண்டிப் மற்றும் ப்ரிமா மற்றும் நிறுவனத்தின் கோதுமை மா, இன்று நள்ளிரவு முதல் ஒரு கிலோ 10 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது.
இந்த நிலையில் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருள்களின் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, நாட்டில் நேற்று நள்ளிரவு முதல், எரிவாயுக்களின் விலைகள் சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் பால்மா, சிமெந்து ஆகியவற்றின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment