” கடன் வழங்குவதற்கு இந்தியா எந்தவொரு நிபந்தனையையும் முன்வைக்கவில்லை என நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச கூறுவது பொய். இந்தியாவால் பல நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றை இலங்கை அரசும் ஏற்றுக்கொண்டுள்ளது.” – இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் டைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” இந்தியாவால் இலங்கைக்கு ஒரு பில்லியன் கடன் வழங்கப்பட்டுள்ளது. அதுவும் பணமாக அல்ல. இந்த கடனுக்கு எவ்வித நிபந்தனையும் முன்வைக்கப்படவில்லை என நிதி அமைச்சர் குறிப்பிட்டார். ஆனால் பல நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்பதே உண்மை.
இலங்கையின் வான்பரப்பை சுதந்திரமாக பயன்படுத்துவதற்கு இந்தியாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உலகில் எந்தவொரு நாடும் இவ்வாறு அனுமதி வழங்குவதில்லை. இது நாட்டில் சுயாதீனத்துக்கு அச்சுறுத்தலான விடயமாகும்.
இலங்கையின் கடல வளத்திலும் இந்திய தலையீட்டை உறுதிப்படுத்தும் விதத்திலான நிபந்தனைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
அத்துடன், டிஜிட்டல் அட்டை விநியோகத்தின்போது அது தொடர்பான ஒப்பந்தம் இந்தியாவுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையும் உள்ளது. இதன்மூலம் எமது நாட்டு மக்களின் தரவுகள் பிரிதொரு தரப்புக்கு செல்லும் அச்சுறுத்தலும் காணப்படுகின்றது. ” – என்றார்.
#SriLankaNews
Leave a comment