mahinda yapa
அரசியல்அரசியல்இலங்கைகட்டுரைசெய்திகள்

யார் இந்த மஹிந்த யாப்பா அபேவர்தன?

Share

மஹிந்த யாப்பா அபேவர்தன 1983 இல் நடைபெற்ற இடைக்கால தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் மாத்தறை மாவட்டத்தின் – ஹக்மன தொகுதியில் போட்டியிட்டு வெற்றிவாகை சூடி, நாடாளுமன்ற அரசியல் பயணத்தை ஆரம்பித்தார்.

1987 இல் ஜே.ஆர். ஜயவர்தன ஆட்சியில் முன்வைக்கப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை (13ஆவது திருத்தச்சட்டம்) கடுமையாக எதிர்த்தார். அதற்கு எதிராக வாக்களித்தார். இதனால் கட்சிக்குள் அவருக்கு கடும் எதிர்ப்பு வலுத்தது. எம்.பி. பதவியையும் இழக்க நேரிட்டது.

ஐ.தே.கவில் இருந்து காமினி திஸாநாயக்க , லலித் அத்துலத்முதலி உள்ளிட்டவர்கள் வெளியேறி, உருவாக்கிய ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியில் பிற்காலத்தில் இணைந்துகொண்டார்.

1993 இல் தென்மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அவர், மாகாண சபையில் எதிர்க்கட்சித் தலைவரானார். பின்னர் முதலமைச்சர் பதவியையும் வகித்தார். 2001 ஆம் ஆண்டுவரை மாகாண அரசியல் பயணம் நீடித்தது.

2001 பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் நாடாளுமன்றம் தெரிவானார்.

2004 இல் சந்திரிக்கா ஆட்சியில் பிரதியமைச்சரானார். அதன்பின்னர் அமைச்சரவைக்குள் உள்வாங்கப்பட்டார். சுதந்திரக்கட்சியில் உயர் பதவிகளையும் வகித்தார்.

2010 பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று, மஹிந்த ஆட்சியில் விவசாய அமைச்சராக செயற்பட்டார்.

2015 பொதுத்தேர்தலிலும் வெற்றிபெற்றார். எதிரணியில் செயற்பட்டார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்தார்.

2020 பொதுத்தேர்தலில் மாத்தறை மாவட்டத்தில் வெற்றிபெற்று நாடாளுமன்றம் தெரிவான அவர், சபாநாயகராக ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார். இன்றளவிலும் அப்பதவியில் நீடிக்கின்றார்.

ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் பதவி விலகிய பின்னர், புதிய நியமனங்கள் இடம்பெறும்வரை சபாநாயகரே பதில் ஜனாதிபதியாக செயற்படுவார். அந்தவகையில் கோட்டா – ரணில் பதவி விலகிய பின்னர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பதில் ஜனாதிபதியாவார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் பட்டம் பெற்றுள்ள சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, முகாமைத்துவம் தொடர்பில் இந்தியாவிலும் கல்வி கற்றுள்ளார்.

ஆர்.சனத்

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...