mahinda yapa
அரசியல்அரசியல்இலங்கைகட்டுரைசெய்திகள்

யார் இந்த மஹிந்த யாப்பா அபேவர்தன?

Share

மஹிந்த யாப்பா அபேவர்தன 1983 இல் நடைபெற்ற இடைக்கால தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் மாத்தறை மாவட்டத்தின் – ஹக்மன தொகுதியில் போட்டியிட்டு வெற்றிவாகை சூடி, நாடாளுமன்ற அரசியல் பயணத்தை ஆரம்பித்தார்.

1987 இல் ஜே.ஆர். ஜயவர்தன ஆட்சியில் முன்வைக்கப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை (13ஆவது திருத்தச்சட்டம்) கடுமையாக எதிர்த்தார். அதற்கு எதிராக வாக்களித்தார். இதனால் கட்சிக்குள் அவருக்கு கடும் எதிர்ப்பு வலுத்தது. எம்.பி. பதவியையும் இழக்க நேரிட்டது.

ஐ.தே.கவில் இருந்து காமினி திஸாநாயக்க , லலித் அத்துலத்முதலி உள்ளிட்டவர்கள் வெளியேறி, உருவாக்கிய ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியில் பிற்காலத்தில் இணைந்துகொண்டார்.

1993 இல் தென்மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அவர், மாகாண சபையில் எதிர்க்கட்சித் தலைவரானார். பின்னர் முதலமைச்சர் பதவியையும் வகித்தார். 2001 ஆம் ஆண்டுவரை மாகாண அரசியல் பயணம் நீடித்தது.

2001 பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் நாடாளுமன்றம் தெரிவானார்.

2004 இல் சந்திரிக்கா ஆட்சியில் பிரதியமைச்சரானார். அதன்பின்னர் அமைச்சரவைக்குள் உள்வாங்கப்பட்டார். சுதந்திரக்கட்சியில் உயர் பதவிகளையும் வகித்தார்.

2010 பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று, மஹிந்த ஆட்சியில் விவசாய அமைச்சராக செயற்பட்டார்.

2015 பொதுத்தேர்தலிலும் வெற்றிபெற்றார். எதிரணியில் செயற்பட்டார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்தார்.

2020 பொதுத்தேர்தலில் மாத்தறை மாவட்டத்தில் வெற்றிபெற்று நாடாளுமன்றம் தெரிவான அவர், சபாநாயகராக ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார். இன்றளவிலும் அப்பதவியில் நீடிக்கின்றார்.

ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் பதவி விலகிய பின்னர், புதிய நியமனங்கள் இடம்பெறும்வரை சபாநாயகரே பதில் ஜனாதிபதியாக செயற்படுவார். அந்தவகையில் கோட்டா – ரணில் பதவி விலகிய பின்னர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பதில் ஜனாதிபதியாவார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் பட்டம் பெற்றுள்ள சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, முகாமைத்துவம் தொடர்பில் இந்தியாவிலும் கல்வி கற்றுள்ளார்.

ஆர்.சனத்

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 693fd3d85a76b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊவா மாகாணத்தில் உள்ள 892 பாடசாலைகளும் இன்று நண்பகலுடன் மூடல் – சீரற்ற வானிலையால் அதிரடி முடிவு!

ஊவா மாகாணத்தில் தற்போது நிலவி வரும் கடும் மழை மற்றும் சீரற்ற வானிலை காரணமாக, மாகாணத்திலுள்ள...

1765326736 Sri Lanka showers Met 6
செய்திகள்இலங்கை

தீவிரமடையும் மழையினால் நீர்நிலைகள் நிரம்புகின்றன: வடகிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள அபாயம் குறித்து எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டில் மீண்டும் அதிதீவிர மழைவீழ்ச்சி பதிவாகுமாயின், நீர்நிலைகளின் நீர்மட்டம்...

image 870x 66fcf5f77e960
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு: இது வெறும் வாக்குறுதி அல்ல, செயல் வடிவம் பெறும்- அமைச்சர் விஜித ஹேரத் உறுதி!

இலங்கையில் தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியான நிரந்தரத் தீர்வு வழங்கப்படும் என்றும், கடந்த காலங்களைப் போலன்றி...

IMG 2110
செய்திகள்உலகம்

சீனாவில் தேவாலயங்கள் மீது கடும் நடவடிக்கை: கட்டிடம் இடிப்பு மற்றும் முக்கிய தலைவர்கள் கைது!

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத ‘நிலத்தடி தேவாலயங்கள்’ (Underground Churches) மீது அந்நாட்டு கம்யூனிஸ்ட் அரசு...