1635812679 weather rain new 2 1
இலங்கைசெய்திகள்

இன்றும் மழை!!

Share

குறைந்த காற்றழுத்த பிரதேசம் நாட்டை விட்டு விலகி சென்றுள்ளது. அதனால்,  நாட்டின் வானிலையில் அதன் தாக்கம் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சில இடங்களில்50 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....