பொதுமக்கள் அனைவரும் இரண்டு முகக்கவசங்களை அணிய வேண்டும் என இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
கொரோனாத் தொற்று வேகமாக பரவி வருவதால், வீடுகளை விட்டு வெளியேறும்போது முக்கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
அதேவேளை, அருகில் உள்ள தடுப்பூசி நிலையங்களுக்கு சென்று தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுமாறும் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே கேட்டுக்கொண்டார்.
மேலும் வெளிநாடுகளுக்கு செல்வதற்காக தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாமல் சிலர் காத்திருப்பதாகவும் முதலில் நாம் வாழ வேண்டும், பின்னர் வெளிநாடுகளுக்குச் செல்வது குறித்து சிந்திக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
Leave a comment