Maithiri
இலங்கைஅரசியல்செய்திகள்

நாம் இல்லையெனில் கோட்டா அரசு கவிழும்: மைத்திரி நெத்தியடி

Share

சிறிலங்கா பொதுஜன முன்னணி அரசிலிருந்து சுதந்திரக் கட்சி வெளியேறினால், அரசாங்கம் கவிழ்வது உறுதி என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கூட்டு அரசில் பிரதான வகிபாகத்தை சிறிலங்கா சுதந்திரக் கட்சி வகிக்கின்றது.

இந்தநிலையில், அரசில் இருந்து கொண்டு அரசை விமர்சிக்காதும், அரசின் கொள்கைகளை ஏற்க முடியவில்லை என்றால் சிறிலங்கா சுதந்திரக் கட்சி கௌரவமான முறையில் வெளியேறவேண்டும்’ என்று அமைச்சர் நாமல் ராஜபக்ச ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பொதுஜன முன்னணியில் இருந்துகொண்டு எமக்குச் சவால் விடும் சிறியவர்களும், பெரியவர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்துதான் அரசியலை ஆரம்பித்தார்கள்.

சுதந்திரக் கட்சிதான் அவர்களின் அரசியல் வாழ்வுக்கு முகவரி கொடுத்தது. இதை மறந்து அவர்கள் செயற்படுகின்றார்கள். கடந்த அரச தலைவருக்கான தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் சிறிலங்கா பொதுஜன முன்னணி கூட்டணி வெற்றியடைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே பிரதான காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், சிறிலங்கா பொதுஜன முன்னணி அரசிலிருந்து சுதந்திரக் கட்சி வெளியேறினால், அரசாங்கம் கவிழ்வது உறுதி என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...

04 22
உலகம்செய்திகள்

மழைக்கும் மத்தியிலும் ஈரான் தலைநகரில் பிரம்மாண்டப் போராட்டம்: உச்சத் தலைவருக்கு ஆதரவு!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியப் படைகள் ஈரான் மீது தொடுத்துள்ள போர் இன்று (மார்ச் 24, 2026)...

03 23
செய்திகள்இலங்கை

சீமெந்து விலை 2,250 ரூபாவாக அதிகரிப்பு: கட்டுமாணத் துறை மேலும் நெருக்கடி!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் விலையேற்றம் காரணமாக, கட்டுமாணப் பொருட்களின் விலைகள் மீண்டும்...