இலங்கைக்கு கிரிக்கெட் விளையாட்டைத் தவிர மற்ற அனைத்து விளையாட்டுகளுக்கும் தேவையான உதவிகளை வழங்க பிரித்தானிய உயர்ஸ்தானிகர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்கவை கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், இந்நாட்டிலுள்ள பாடசாலை மாணவர்களின் விளையாட்டுத் திறனை வளர்க்க உடற் பயிற்சி, ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
அதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவு வழங்கப்படும் என தெரிவித்தார்.
கிரிக்கெட் தவிர மற்ற விளையாட்டுகளுக்கு தேவையான அறிவு, பயிற்சி, தொழில்நுட்பம் மற்றும் புரிதலை வழங்க பிரித்தானிய உயர்ஸ்தானிகர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment