இலங்கை இராணுவத்தின் 72ஆவது வருடப் பூர்த்தியை முன்னிட்டு இன்று அநுராதபுரம் சாலியபுர கஜபா ரெஜிமென்ட் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச கலந்துகொண்டுள்ளார்.
அத்துடன் கிரிக்கெட் மைதானம் ஒன்றையும் திறந்து வைத்ததுடன் மைதானத்தில் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டுள்ளார். இதில் கிரிக்கெட் வீரர் பெரேராவின் பந்தை ஜனாதிபதி எதிர்கொண்டார். நிகழ்வில் கிரிக்கெட் வீரர் அஜந்த மெண்டிஸூம் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் ஜனாதிபதி இராணுவ தினத்தை முன்னிட்டு உரையாற்றுகையில்,
நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியமைந்தமையை வேறு காரணங்களை முன்னிலைப்படுத்தி நியாயப்படுத்தப் போவதில்லை.
கொரோனாத் தொற்றைக் கட்டுப்படுத்த 2 வருடங்களாக போராடி வருகின்றோம்.
நாட்டை முடக்கியமை, பல்வேறு தடைகள் காரணமாக நாட்டின் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதற்காக நியாயம் கூற முடியாது.
மக்களுக்காக நாம் பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம் தொற்றைக் கட்டுப்படுத்தி புதிய இயல்பு நிலைமையில் நாட்டை திறந்து புது உத்வேகத்துடன் நாட்டை முன்னேற்றவுள்ளோம்.
அத்துடன் புதிய அரசமைப்பை அடுத்த வருடத்துக்குள் கொண்டு வரவும் புதிய தேர்தல் முறைமையொன்றை அடுத்த வருடத்துக்குக் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற வாக்குறுதியை இந்த வருட இறுதிக்குள் நிறைவேற்றுவோம் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a comment