MediaFile 15
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம்: கடலட்டைப் பண்ணையைப் பார்க்கச் சென்ற 17 வயதுச் சிறுவன் சடலமாக மீட்பு!

Share

யாழ்ப்பாணம் – குருநகர் கடற்பரப்பில் இன்று (நவம் 22) காலை, கடலுக்குச் சென்றிருந்த நிலையில் காணாமல் போயிருந்த 17 வயதுச் சிறுவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

குருநகர் பகுதியைச் சேர்ந்த ஜோர்ஜ் ஸ்ரிபன் மதிவாணன் (17 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த சிறுவன் நேற்று இரவு, அப்பகுதியில் உள்ள கடலட்டைப் பண்ணையைப் பார்வையிடுவதற்காகக் கடலுக்குச் சென்றிருந்த நிலையில் காணாமல் போயிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அப்பகுதி மக்களால் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இன்று காலை சிறுவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிறுவன் படகிலிருந்து தவறி கடலில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் சந்தேகிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share
தொடர்புடையது
anura kumara 1
இலங்கை

பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் – ஜனாதிபதியின் அதிரடி முடிவு!

  நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் குறித்து கண்டறிவதற்காக ஜனாதிபதி அநுர...

arested 3
இலங்கை

ACMC கடசியின் உப தவிசாளர் உட்பட ஐவர் போதைப்பொருளுடன் கைது.

ஹெரோயின் போதைப்பொருளுடன் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர்...

death body 2
இலங்கை

கடற்கரைப் பகுதியில் மீட்கப்பட்ட சடலம்!

காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள கடற்கரைப் பகுதியில் இருந்து நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவரின்...

கெமுனு விஜேரத்ன
இலங்கை

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்த கெமுனு விஜேரத்ன !

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சமூக வலைத்தளங்கள்...