udaya
அரசியல்இலங்கைசெய்திகள்

அரசை விரட்டியடுத்துவிட்டு புதிய ஆட்சியை நிறுவுவோம்! – கம்மன்பில சூளுரை

Share

“வேலை செய்ய முடியாத இந்த அரசை வீட்டுக்கு அனுப்பிவிட்டு மக்களுக்காகப் பணியாற்றக்கூடிய அரசொன்றை மக்களே உருவாக்கிக்கொள்ள சந்தர்ப்பத்தை மீண்டும் ஏற்படுத்திக்கொடுப்போம்.”- இவ்வாறு புதிய ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில எம்.பி. தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

“அத்தியாவசியப் பொருட்களான எரிபொருள், மருந்துப்பொருட்கள், உணவுப் பொருட்களுக்கு நாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உண்மையில் இந்த தட்டுப்பாடு உருவாக்கப்பட்டதொன்று.

கடந்த காலங்களில் நாட்டுக்கு எதிரான பல காட்டிக்கொடுப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. இந்த ஒப்பந்தங்கள் தொடர்பில் அறிந்துகொள்வதற்கு நாட்டு மக்களுக்கு நேரமில்லை.

பால்மாவுக்காகவும், சமையல் எரிவாயுவுக்காகவும், எரிபொருட்களுக்காகவும் வரிசையில் நின்றுவிட்டு, வீட்டுக்குச் செல்லும்போது வீட்டில் மின்சாரம் இருக்காது. இதனால், அரசின் சரி, தவறுகளைக் கண்டறிய மக்களால் முடியவில்லை.

தற்போதைய அரசு பொறுப்பேற்கும்போது டொலரின் பெறுமதி 190 ரூபாவாக இருந்தது. எனினும், தற்போது 300 ரூபாவை நெருங்கியுள்ளது. இதற்கு நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவே பொறுப்புக்கூற வேண்டும்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...