இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு எப்போதும் உதவும் என்று இந்தியா தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தெரிவித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர், இந்தியாவின் நம்பகமான நண்பர் மற்றும் நேர்மையான பங்காளி நாடு என்ற அடிப்படையில் இந்தியா எப்போதும் இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு உதவும் என்று உறுதியளித்துள்ளார்.
கம்போடியாவில் இடம்பெற்று வரும் ஆசியான் மற்றும் இந்திய அமைச்சர் மட்ட மாநாட்டில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பங்கேற்க சென்றுள்ளார்.
இதன்போது இடம்பெற்ற சந்திப்பின்போதே அமைச்சர் அலி சப்ரிக்கு ஜெய்சங்கர் இந்த உறுதிமொழியை அளித்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment