20220607 112126 scaled
அரசியல்இந்தியாஇலங்கைசெய்திகள்பிராந்தியம்

கச்சதீவை பெறுவதாக இருந்தால் எங்களின் பிணங்களை தாண்டியே பெறவேண்டும்!

Share

தமிழகத்தில் உள்ள 2000 விசைப்படகுகளை நிறுத்தினால் இந்தியா எங்களுக்கு வழங்கிய உதவியின் இரண்டு மடங்கை நாம் திருப்பி அவர்களுக்கு வழங்குவோம் என யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் உபதலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்தார்.

தொண்டமானாறு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே நா.வர்ணகுலசிங்கம் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,
நிவாரண பொதிகளை வழங்கி விட்டு கச்சதீவை பெற்றுக்கொள்ளலாம் என இந்தியா கனவிலும் நினைக்க கூடாது. கச்சதீவை பெறுவதாக இருந்தால் எங்களின் பிணங்களை தாண்டியே பெறவேண்டும்.

தமிழகத்திலுள்ள விசைப்படகுகளால் தான் எமக்கு பிரச்சினை. நாட்டுப் படகால் எமக்கு எந்தவித பிரச்சினையும் கிடையாது. விசைப்படகுகள் நிறுத்தப்பட்டால் இரண்டு பகுதி மீனவர்களும் இணைந்து பேசி கடற்றொழிலை செய்ய முடியும்.- என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...